முன்னுரை

என்னுடை வலைபக்கதிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இங்கு என்னை பற்றியும் என் வாழ்வில் முதன்மை பங்களித்த பலவற்றை பற்றியும் அடக்கத்துடன் பகிர்ந்துள்ளேன். என்னுடைய கிருக்கல்களை பார்வையிட மறக்காதீர்கள், அதில் சுவாரஸ்யமான பல தகவல்களையும், ஆய்வுகளையும், படங்களையும் தொகுத்துள்ளேன். இவையாவும் நான் பார்த்தவைகளும், அனுபவப்பட்டவைகளுமே ஆகும். மேலும், இவ்வலைப் பதிவு கருத்துக்கள் அனைத்தும் என் சொந்த கருத்துக்களே ஆகும்.

என்னை பற்றி

நான் ஒரு இந்தியன் என்பதில் எனக்கு ஒரு பெருத்த ஆணவமுண்டு. நான் கடலூரில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் பிறந்தேன். சென்னையில் வளர்ந்தேன். இப்போது ஒரு அன்பு மனைவிக்கு நல்ல கணவனாக, ஒரு அன்பு குழந்தைக்கு தகப்பனாக இருக்கிறேன். என்னுடைய இளநிலை பொறியியல் பட்டம் மதராஸ் பல்கலைகழகத்திலும், முதுநிலை பொறியியல் பட்டம் சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்திலும் பெற்றேன். எனக்கு இசை ரசனை மிக அதிகம். மேலும் தொழில் சார்ந்த மற்றும் சித்தாந்த புத்தங்கள் படிப்பது, மின்னணுவியல் ஆராய்ச்சி, வீட்டு பொறியியல் இவைகளில் நாட்டம் அதீதம். எனக்கு செட்டிநாடு சமையல் மிக விருப்பம். எனக்கு புதிய தொழில் சார்ந்த செய்திகளையும், வித்தைகளையும், தகவலகளையும் அறிந்துகொள்வதில் அதீத ஈடுபாடு உண்டு.

தொழில் முறையில்

நான் தொழிற்முறையில் ஒரு செயர்க்கை அறிவுயியல் பயன்பாட்டு ஆராய்ச்சி விஞ்ஞானி, சரியாக சொல்லவேண்டுமெனில் ஒரு தகவு அகழ்ந்தெடுப்பு விஞ்ஞானி. எனக்கு புள்ளியியல் மொழி செயலாக்கம், பகிர்ந்தமை கணிப்பணி, பொறியாய்வு, உரை அகழ்ந்தெடுப்பு, மற்றும் பொருள் சார்ந்த வடிவமைப்பில் மிகுந்த தேர்ச்சியும், அனுபவமும் உண்டு. தற்போது எனக்கு வாகனவியலில் செயர்க்கை அறிவு புகுத்துதல் மீது நாட்டம் ஏற்பட்டுள்ளது. நான் சமுக அக்கரை கொண்டு, நிறைய அறிவு மற்றும் அனுபவம் பகிர்தல் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளேன். அதனால் பயனடைந்தோர் பலர். எனக்கு தொழிற்சார்ந்த கல்வி கற்பிப்பதில் மிகுந்த ஆர்வமுண்டு. என்னுடைய ஒரு பகுதி நேரத்தை தற்போதைய மாணவர்களுக்காக ஒதுக்குவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மேலும் பல மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க காத்திருக்கிறேன். அடிப்படையாக, எனக்கு என் தாய்நாடும் தாய்மொழியும் இரு கண்களாகும். எந்நாட்டிற்காக உழைத்துக்கொண்டே இருப்பேன்.

செயல்பாடுகள்

தொடர்பு

உங்களுக்கு ஏதாவது தொழிற்நுட்பம், கல்வி அல்லது பொதுவான் தகவல் வேண்டுமெனில், என்னை தயக்கமின்றி தொடர்பு கொள்ளவும். என்னால் முடிந்தவரை தரக்கூடிய தகவல்கள் இலவசமாக தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன். என்னுடைய இந்த வலைபக்கத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர தவராதீர்கள். மிக்க நன்றி.